Connect with us

CINEMA

‘உனக்கு பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை’…! விஜய்க்கும் பிரதீப்பிற்க்கும் இடையே வெடித்த சண்டை…! கலவரமான பிக் பாஸ் வீடு…! 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன்  7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

   

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு சென்றனர்.  இதைத்தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்று விட்டது. தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2-வது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் ஆண்டனி விஜய் வர்மாவைப் பார்த்து ‘விசித்ராவும் யுகேந்திரனும் போய்ட்டு கிச்சனில் ஹெல்ப் பண்ணும் போது நீங்க ஒரு கேப்டனாக பார்த்திட்டே இருந்திருக்கீங்க’ என்று கூறுகிறார்.

பதிலுக்கு விஜய் வர்மா ‘உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல’ என்று கூறுகிறார். பின்னர் பிரதீப் ஆண்டனி ‘சப்பாத்தி குருமா டிஸ்கஸ் பண்ணாமல் ஏன் எழுதினீங்க’ என்று கேட்க,  பதிலுக்கு விஜய் வர்மா ‘நேற்று நாங்க டிசைட் பண்ணும் போது நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க. நாங்க எல்லாரும் டிஸ்கஸ் பண்ணும் போது இதே பொசிஷனில் டவல் ஆட்டிட்டு இருந்தீங்க’ என்று கோபமாக சண்டை இடுகிறார். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டு உண்மையான முகத்தை காட்டி வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

author avatar
Continue Reading

More in CINEMA

To Top