
CINEMA
கோலாகலமாக நடந்த தளபதி 68 படத்தின் பூஜை.. போட்டோ “அதுக்கு” அப்புறம் தான் வரும்.. அர்ச்சனா கல்பாத்தியின் சமூக வலைதள பதிவு..!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போது நேற்று நடைபெற்றுள்ளது. முதலில் பாடல் காட்சிகளுடன் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும், பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தர் கோரியோகிராப் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. நேற்று சென்னையில் தளபதி 68 படத்தின் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில், உங்களது அன்பான ஆதரவுடன் வாழ்த்துக்களுடனும் எங்களது 25-வது திரைப்படத்தை தளபதியுடன் இன்று தொடங்கினோம்.
அனைத்து நடிகர்கள் பட குழுவினர் மற்றும் புகைப்படங்கள் குறித்த அப்டேட் லியோ பட ரிலீசுக்கு பிறகு வரும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படம் ரோலர் கோஸ்ட் சவாரியாக இருக்கும். லியோ பட ரிலீசுக்கு இருக்கு பிறகு தளபதி 68 படம் குறித்த அனைத்து அப்டேட்டுகளும் வரும் என குறிப்பிட்டுள்ளார்.
With all your love support and best wishes we started our 25th Film with our #Thalapathy today All cast and crew updates and photos will come after #Leo ❤️????
( Dreams come true more than once ❤️ ) #Thalapathy68 @actorvijay Sir @vp_offl @thisisysr @aishkalpathi @Ags_production— Archana Kalpathi (@archanakalpathi) October 2, 2023