பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கவினும், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரும் சிறப்பு விருந்தினர்களாக வீட்டுக்குள் நுழைந்து கலகலப்பை ஏற்படுத்தினர். பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர்கள், இருவரும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். இது போட்டியாளர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்ததோடு, ரசிகர்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சியாகவும் அமைந்தது.
திவ்யா கணேசன் மற்றும் சபரிநாதன் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோரும் சத்தமில்லாமல் இறுதி மேடையை நோக்கி முன்னேறி வருகின்றனர். நாளை சனிக்கிழமை இறுதிப்போட்டிக்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றியாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விறுவிறுப்பான சண்டைகள், உணர்ச்சிகரமான கொண்டாட்டங்கள் எனப் பல திருப்புமுனைகளைச் சந்தித்த இந்த சீசனின் மகுடத்தைத் சூடப்போகும் வெற்றியாளரைத் தீர்மானிக்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
