விளம்பரத்துக்கே இத்தனை கோடியா…? நடிகர் தனுஷின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு…. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!!

By Devi Ramu on தை 17, 2026

Spread the love

இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் திரைத்துறையில் முத்திரை பதித்து வரும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 230 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. ஆண்டுக்கு 45 கோடி ரூபாய் வரை ஈட்டும் இவர், ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரையும், விளம்பரங்களுக்கு 3 கோடி ரூபாயும் சம்பளமாகப் பெறுகிறார். போயஸ் கார்டனில் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு அருகிலேயே 150 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவில் வசித்து வரும் இவர், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பென்ட்லி போன்ற பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.

வெங்கடேஷ் பிரபு என்ற இயற்பெயர் கொண்ட தனுஷ், ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தரமான படங்களைத் தயாரித்தும் லாபம் ஈட்டி வருகிறார். 19 வயதில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுத் சினிமாவுக்கு வந்த தனுஷ், இன்று ஹாலிவுட் வரை உயர்ந்து தென்னிந்தியாவின் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.