Categories: சினிமா

அட அவரு, இவரு எல்லாம் கிடையாதுப்பா.. பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர்தான்.. அக்ரிமெண்ட் கூட கையெழுத்தாச்சு..!!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு சீசங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற முக்கிய காரணமாக இருந்தவர் கமல்ஹாசன். கமல்ஹாசனுக்காகவே வார இறுதி நாட்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம். ஒரு வாரம் முழுவதும் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்ப்பு சொல்வதற்காகவும் தட்டிக் கேட்பதற்காகவும் கமல்ஹாசன் களமிறங்குவார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கமல்ஹாசன் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க உள்ள நிலையில் கமல்ஹாசன் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் இந்த நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சேனல் தரப்பில் இருந்து தற்போது சிம்பு, சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிலும் இறுதியில் விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அக்ரீமெண்டில் கையெழுத்திட்டுள்ளதாகவும் இன்னும் பத்து நாட்களில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் எப்படி இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அதே சமயம் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

31 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

36 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

40 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

43 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

47 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

49 minutes ago