Categories: சினிமா

ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க MR ராதா போட்ட இரண்டு Conditions… அரண்டு போன தயாரிப்பாளர்…

Spread the love

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் எம் ஆர் ராதா. இவரின் முழு பெயர் சென்னை ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதாகும். தனது 10 வயதில் இருந்தே நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தோன்றி இறுதியில் நாடகங்களுக்கான கதைகள் அவருக்காகவே தனிப்பயனாக்கப்பட்டவை என்ற நிலைக்கு வளர்ந்தவர் எம் ஆர் ராதா. கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான நாடக கலைஞர் எம் ஆர் ராதா.

1960களில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு வில்லனாக நடித்தவர் எம் ஆர் ராதா. இயக்குனர்கள் இவருக்காகவே கதாபாத்திரம் உருவாக்கி எம் ஆர் ராதாவை நடிக்க வைத்தனர். அப்படி அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு இணையாக போற்றப்பட்டவர் எம் ஆர் ராதா.

அரசியல் சார்ந்த பிரச்சனைகளை எம்ஜிஆர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரது இல்லத்தில் வைத்து எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டதன் மூலம் சர்ச்சையில் சிக்கி சிறைக்கு சென்றவர் எம் ஆர் ராதா. இவர் துப்பாக்கியால் சுட்டதால் எம்ஜிஆர் அவர்களின் குரல் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எம் ஆர் ராதா என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது ரத்தக்கண்ணீர் திரைப்படம் தான். அப்படி ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் அடைந்தவர் எம் ஆர் ராதா.ரத்தக்கண்ணீர் திரைப்படம் 1954ஆம் ஆண்டு வெளியான நாடகத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் எம் ஆர் ராதா, ஸ்ரீரஞ்சனி, எஸ் எஸ் ராஜேந்திரன், சந்திரபாபு, எம் என் ராஜம், எஸ் ஆர் ஜானகி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ரத்தக்கண்ணீர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணீக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று எம் ஆர் ராதா தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கலைஞர் ஆனார். அப்படி ஒரு அபாரமான நடிப்பை ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார் எம் ஆர் ராதா. இப்படத்தின் தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் ஆவார். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு எம் ஆர் ராதா இரண்டு நிபந்தனைகளை தயாரிப்பாளர்களிடம் கூறி இருக்கிறார்.

அந்த இரண்டு நிபந்தனைகள் என்னவென்றால் முதலில் நான் நாடகத்தில் இருந்து தான் என் வாழ்க்கையை தொடங்கினேன். எனக்கு நாடகங்கள் மிகவும் முக்கியம். அதனால் நாடகங்களில் நடித்துக் கொடுத்துவிட்டு பின்னர்தான் இந்த ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். மற்றொன்று கே பி சுந்தராம்பாள் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். எனக்கு அதைவிட அதிகமாக 25 ஆயிரம் ரூபாய் போட்டு எனக்கு ஒரு லட்சத்து 25 ரூபாயாக எனக்கு சம்பளம் தர வேண்டும் என்று கண்டிஷனை போட்டிருக்கிறார் எம் ஆர் ராதா. இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் பெருமாள் பின்னர் ஒப்புக்கொண்டு அவரை நடிக்க வைத்தார் படமும் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago