தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. திரு.கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக இருந்து வந்ததே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதுவரை 6 சீசன்கள் கடந்திருக்கும் பிக் பாஸ் தற்போது ஏழாவது சீசனை எதிர்நோக்கி செல்கிறது. கடந்த சீசனில் அசிம் ,தனலட்சுமி, ஜனனி, ஷிவின் ,விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடியது நாம் அனைவரும் அறிந்ததே .
கடந்த ஆறாவது சீசனில் அசிம் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். தற்பொழுது ஒளிபரப்பாகவிருக்கும் ஏழாவது சீசனில் யார் உள்ளே வரக்கூடும் என்பது பற்றி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த 7 வது சீசன் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இதில கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதன்படி, ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்தரஜா, விஷ்ணு, சத்யா, அனன்யா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டோர் தான் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்ட நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா என்பவர் பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள இருக்கிறாராம். இவர் ஒரு நடன கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…
பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…