அதுதான்டா உன் வேலை அதுக்குத்தான் நீ இருக்க… துளி கூட மரியாதை இல்லாமல் பிரதீப்பை பொளந்து கட்டிய ஜோவிகா.. பரபரப்பு ப்ரோமோ…

By Begam on ஐப்பசி 12, 2023

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறு விறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்போது போட்டியாளர்களுக்கிடையில் பிக்பாஸ் வீட்டில்  போட்டி ஆரம்பித்துள்ளது.

   

அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம். அதன்படி தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா பிரதீப் இடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. இதில் பிரதீப் ஜோதிகாவை பார்த்து ‘ 6 பேரு இங்க உக்காந்து சமைச்சுக்கிட்டு இருக்கோம். குறை வேற சொல்லறீங்க’ என்று கோபமாக கேட்கிறார்.

   

 

அதற்கு ஜோவிகா’ நீ எவ்ளோ இருந்தாலும் சமைச்சுதான் ஆகணும்’ என மரியாதை இல்லாமல் பேச, கொந்தளித்த பிரதீப் ‘ அதுக்காக நீ என்னை அடிமைமாறி நடத்துவியா?’ என கத்துகிறார். இதைத்தொடர்ந்து ஜோவிகா ‘சரிடா சரிடா. என் சாப்பாட்டை நான் வேஸ்ட் பண்றேன்னே வைச்சுக்கோ .அதுக்காக நீ சமைக்க மாட்டேன்னு சொல்லுவியா? அதுதான்டா உனக்கு வேலை.’ என கொஞ்சம் கூட மரியாதை குடுக்காமல் பேசுகிறார். இப்படி பரபரப்பாக இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ…