தமிழ் சினிமா மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சமீப காலமாகவே விவாகரத்து என்பது அதிகரித்து வருகிறது. நடிகர் நடிகைகள் தங்களுடன் இணைந்து நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதும் சகஜமாகிவிட்டது. அதன்படி தற்போது பிக்பாஸ் பிரபலமான நடிகை சம்யுக்தா தன்னுடைய விவாகரத்து தொடர்பாக அறிவித்துள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த சம்யுக்தா படிக்கும்போதிலிருந்தே மாடலின் துறையில் கவனம் செலுத்தி வந்தார். பிறகு பெற்றோரின் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ராயன் என்ற ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக சம்யுக்தா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த கால வாழ்க்கையிலிருந்து தான் முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். விவாகரத்து பற்றிய செய்தியை பகிர்ந்துள்ள சம்யுக்தா இந்த 2025 இல் இறுதியாக நான் என்னுடைய பேப்பர் வேலைகளை எல்லாம் முடித்து விட்டேன், எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வலிமையானவள் ஆக உணர்வதாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் ஒரு சேனலுக்கு அழைத்திருந்த பேட்டியில் தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதாக வெளிப்படையாக கூறி பரபரப்பை கிளப்பு இருந்தார். கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் தன் கணவர் வேறொரு பெண்ணுடன் துபாயில் நான்கு வருடங்களுக்கும் மேலாக இருப்பது தெரியவந்த போது லாக் டவுன் என்பதால் என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. எனக்கு அப்போது உதவியாக இருந்தது பாவனா பாலகிருஷ்ணன் தான் என அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே ராதிகா நடித்த சந்திரகுமாரி சீரியலில் நடித்த சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவருடைய விவாகரத்து செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…
நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள சௌராஹா தெருக்களில் இரண்டு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக…
தமிழக விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், தமிழக அரசின் 'உழவன்' (Uzhavan) செயலி…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான…
தமிழகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 29…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான 'போதைப்பொருள் தடுப்புப் படை' அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.…