தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் கஸ்தூரிராஜா. கிராமத்து கதைகளை கிராமிய மணம் மாறாமல் அப்படியே தந்து வெற்றி பெற்ற இயக்குனர்களில் பாரதிராஜாவிற்கு அடுத்த இடம் இவருக்கு தான் உண்டு. சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து மில்லில் வேலை செய்து அதன் பிறகு இயக்குனர் விசு உடன் இணைந்து 16க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரன் நடித்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு ஆத்தா உன் கோவிலிலே, சோலையம்மா, தாய் மனசு, நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, என் ஆசை ராசாவே மற்றும் கும்மி பாட்டு என வரிசையாக சூப்பர் ஹிட் கிராமத்து படங்களை இயக்கிய கஸ்தூரிராஜா தன்னுடைய மகன் தனுஷை வைத்து இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற பதிர்பருவ காதல் பற்றிய படமும் ஹிட் ஆனது. இறுதியாக கடந்த 2006 ஆம் ஆண்டு இது காதல் வரும் பருவம் என்ற படத்தை இயக்கி இருந்தார். சோலையம்மாள் மற்றும் கும்மி பாட்டு போன்ற படங்களில் பாடல்களையும் எழுதியுள்ள கஸ்தூரிராஜா இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பல முகங்களை கொண்டு சினிமாவில் திகழ்ந்தவர்.
இவருடைய மூத்த மகன் செல்வராகவன் சினிமாவில் பெரிய இயக்குனராகவும் நடிகராகவும் உள்ளார். அதனைப் போலவே இளைய மகன் தனுஷ் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் தேவாவுடன் பயணித்த கஸ்தூரிராஜா முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், மௌன மொழி என்ற திரைப்படத்தில் தான் பாட்டு எழுத ஆரம்பித்தேன். தேவாவுடன் இணைந்து சுமார் ஐந்து படங்களுக்கு பாட்டு எழுதினேன். எல்லா பாட்டுமே ஹிட் ஆனது. இருந்தாலும் இளையராஜா என்னை அழைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
அவர் அழைத்து பாட்டு எழுதவில்லை என்றால் கவிஞனே கிடையாது என்ற எண்ணம் எனக்குள் வந்தது. அதனால் சொந்தமாகவே படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அவரைப் பார்ப்பதே மிகவும் சிரமமாக இருந்த நிலையில் அவரை சந்தித்து பேசி சம்மதமும் வாங்கி விட்டேன். அவருடன் இணைந்து பாட்டு எழுத வேண்டும் என்பதற்காகவே கடன் வாங்கி சொந்தமா படம் எடுத்தேன். அந்தப் படம் தான் நாட்டுப்புறப் பாட்டு. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவக்குமார் மற்றும் குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்க நான் பாட்டு எழுதினேன் என்று கஸ்தூரிராஜா பேசியுள்ளார்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…