விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட் மற்றும் சிவகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு பஞ்சம் இல்லாமல் சுமார் 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் சூழலில் பிக் பாஸ் உள்ளது. கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் சாச்சனா தப்பினார். ஆனால் இந்த வாரம் பிக் பாஸ் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில் டபுள் எவிக்ஷன்-ல் சாச்சானா மற்றும் RJ ஆனந்தி இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். வெளியேறிய 2 போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 63 நாட்களை கடந்துள்ளது. RJ ஆனந்தி ஒரு நாளைக்கு ரூ. 25,000 சம்பளமாக பெற்று வந்த நிலையில், 65 நாட்களுக்கு மொத்தம் ரூ. 15 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். சாச்சனா ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளம் பெற்று வந்த நிலையில் 63 நாட்களுக்கு மொத்தமாக ரூ. 12 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…