என்னது.. பிக் பாஸ் பூர்ணிமா நயன்தாரா கூட நடிச்சிருக்காங்களா…? இதை கவனிசீங்களா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

By Begam on கார்த்திகை 28, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களில் தற்பொழுது வரை 10 போட்டியாளர்களுக்கும் மேல் வெளியேறி உள்ளனர்.

   

அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 59 நாட்களையும் நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பூர்ணிமா. இவருக்கென்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். யூட்யூப் பிரபலமான இவர் தற்பொழுது நன்றாக இருந்த தன் பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளார்.

   

 

இவர் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் இணைந்து செய்யும் வேலைகள் ரசிகர்களை கடுப்பேத்தி வருகிறது. இதனால் அவர் மக்களுக்கு மத்தியில் தனக்கிருந்த நல்ல பெயரையும் இழந்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸில் பங்கேற்றுள்ள பூர்ணிமா நடிகை நயன்தாராவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்தது.

அதாவது அவர் டிசம்பர் 1ஆம் தேதி நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியாக உள்ள ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளா.ர் இதனை நேற்று வெளியான டிரைலரும் உறுதி செய்துள்ளது . இந்த ட்ரைலரில் கூட பூர்ணிமா இருக்கிறார். தற்பொழுது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த ட்ரெய்லர்…