பிக் பாஸ் காதல் ஜோடி அமீர் பாவணி வாங்கிய புது கார்…..வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் ….வைரலாகும் புகைப்படம்…..

By Begam on புரட்டாதி 15, 2022

Spread the love

பிக் பாஸ் ஜோடிகள் அமீர் பாவணி புதிய கார் ஒன்று வாங்கியுள்ளனர். தற்பொழுது அந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிள் சீரியல் நடிகையாக  நுழைந்தவர் பவானி. இவர் தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.

   

போட்டியிலும் நன்கு விளையாடி ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றார்.முதல் இடத்தை ராஜுவும் , இரண்டாம் இடத்தில் பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பெற்றார் பவானி. இவர் கடந்த ஆண்டு 2017 பிரதீப் குமார் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வந்தவர் அமீர்.

   

 

அமீர் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அமீர் வெளிப்படையாக தனது காதலை பாவனியிடம் கூறினார் .பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் டைட்டில் பட்டத்தையும் வென்றார்கள். தற்பொழுது இருவரும் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அமீர் பாவனி  இணைந்து ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளனர். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு தெரிவித்துள்ளார். தற்பொழுது புகைப்படம் வைரலாகி வருகிறது.