விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது ஏழாவது சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி இருக்க, 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த சீசன் அமைந்துள்ளது.
பிக் பாஸ் வீடாக இரண்டாக பிரிந்ததிலிருந்ததே டாஸ்க் விளையாட்டிலும் பல புதுமைகள் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் தனித்தனியாக பிரிந்து விளையாடாமல் கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒவ்வொருவராக தோற்கடித்து வருகின்றனர். அப்படித்தான் நேற்றைய எபிசோடிலும் நடந்தது. எவிக்ஷன் லிஸ்டில் இருந்த பிரதீப் தான் அங்கிருந்த ஹவுஸ் மீட்கலால் டார்கெட் செய்யப்பட்டார். ஜோதிகா ,பூர்ணிமா, மாயா, ரவீனா என பல பெண் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க வலியுறுத்தினார்கள்.
அது மட்டும் இன்றி பல ஆண் போட்டியாளர்களும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூறினார்கள். மொத்தம் அதிக ரெட் கார்டு வாங்கிய அவர் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் நெட்டிசன்களால் இந்த முடிவு ஏற்கப்படவில்லை. அவருக்கு ஆதரவாக தற்போது வரை இணையத்தில் பல்வேறு பதிவுகளும் கமாண்டுகளும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் தற்பொழுது அவருக்கு ஆதரவாக பிக் பாஸ் இந்த சீசனிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட யுகேந்திரனின் மனைவி மற்றும் யுகேந்திரன் இருவரும் அவருக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர். யுகேந்திரனின் மனைவி தனது X தள பக்கத்தில், ‘கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலக வேண்டும். இது ஆணித்தரமான ஒரு விஷயம். இவ்ளோ பெரிய குற்றச்சாட்டுடன் ஒருவரை நீங்கள் வெளியே அனுப்பி உள்ளீர்கள்? இதே போல ஒரு குற்றச்சாட்டு உங்களுக்கு வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க?
நேரடியா பிரதீப் வெளியே அனுப்ப உங்களுக்கு தைரியம் கிடையாது. அதனால இப்படி சொல்லி, போட்டியாளர்கள் எல்லாத்தையும் ரெட் கார்டு காமிக்க வச்சு வெளியே அனுப்பி இருக்கீங்க. பட் நீங்க டிசைட் பண்ணி தான் இதை பண்ணி இருக்கீங்க’ என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவரை தொடர்ந்து பிரதீப் வெளியிட்ட பதிவிற்கு இவரது கணவரான யுகேந்திரன் ‘செம மாசு’ என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இவர்கள் இருவரும் பிரதீபுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…