Categories: CINEMA

பிரதீப் வெளியேற்றப்பட்ட விவகாரம்… கமலை விமர்சித்து வைரலாகும் விஜயின் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்க்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில்  ரசிகர்களின் பெரும் ஆதரவை  பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான்  பிரதீப் ஆண்டனி. இந்த சீசன் துவங்கிய முதல் வாரத்தில் பிரதீப் ஆண்டனி பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் நிகழ்ச்சி செல்ல செல்ல அவருக்கு ஆதரவு கிடைத்தது. அவர் எதார்த்தமாக தான் இருக்கின்றார் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களின் பிரதீப்பிற்கே அதிக ஆதரவு கிடைத்தது. ஒவ்வொருமுறை பிரதீப் நாமினேட் ஆன போது அவருக்கு அதிக வாக்குகளை செலுத்தி பிரதீப்பை ரசிகர்கள் காப்பாற்றி வந்தனர். பிரதீப் முதல் ஆளாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகின்றார் என கமல் அறிவிக்கும் போது அங்கு இருக்கும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் பிரதீப்பிற்கு இவ்வளவு சப்போர்ட் இருக்கின்றதா என அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக பிரதீப் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களுக்கு சற்று பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனினும் அவருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவையே கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிரதீப் மற்ற ஹவுஸ்மேட்களால்  டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் கோபமான அவரது ஆதரவாளர்கள் கமலஹாசனுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் மேடை ஒன்றில் பேசிய பழைய வீடியோ ஒன்றை நடிகர் கமலஹாசனை டேக் செய்து வைரலாகி வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகர் விஜய், ‘ அரசியல்ல புகுந்து விளையாடுங்க. விளையாட்டுல புகுந்து அரசியல் பண்ணாதீங்க’ என்று கூறுகிறார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

27 mins ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

1 hour ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

2 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

2 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

3 hours ago

‘என்ன நெனச்சிட்டு இருக்கார்.. என் டைம் ரெண்டு மாசம் வேஸ்ட்’ – ரஜினியின் செயலால் கோபத்தில் கத்திய கிரேஸி மோகன்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

3 hours ago