பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டவர் பிரதீப் ஆண்டனி. முதலில், இவரது செயல்பாடுகள் பலராலும் கவனிக்கப்பட்டது. முக்கிய போட்டியாளர் என, சக போட்டியாளர்களால் விமர்சிக்கப்பட்டார். எந்த விஷயத்திலும், அவரது முரண்பட்ட செயல்பாடுதான், அவரது இயல்பாக பார்க்கப்பட்டது. கேமராக்கள் முன் நடிக்காமல், அவர் உண்மையாக நடந்துக்கொண்டது பார்வையாளர்களுக்கும் பிடித்துப் போனது.
இந்நிலையில், நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என புகார் எழுந்ததை அடுத்து, ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை கமல் வெளியேற்றினார். பிரதீப்பை வெளியேற்ற பிக்பாஸ் மறுத்திருந்தால் நானும் வெளியே போயிருப்பேன். பெண் பாதுகாப்பு, வீட்டிலும், நாட்டிலும் எனக்கு மிக முக்கியம் என வீரவசனம் பேசினார் கமல்ஹாசன். இதை கலாய்க்கும் விதமாக, புன்னகை மன்னன் படத்தில், தனக்கு தெரியாமல் திடீரென கமல் தனக்கு முத்தம் கொடுத்தது குறித்து நடிகை ரேகா பேசிய வீடியோ, இப்போது வைரலாகி வருகிறது.
புன்னகை மன்னன் படத்தில் நடித்தபோது, 10ம் வகுப்பு படித்த சின்ன பெண்ணாக இருந்தேன். அப்போது என்னிடம் சொல்லாமலேயே அப்படி ஒரு முத்தக்காட்சியை எடுத்துவிட்டனர். அப்பா இதற்கு ஒத்துக்க மாட்டாரே, என எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. பெரிய ஜீனியஸ் குழந்தைக்கு முத்தம் கொடுத்தது போல் நினைத்துக்கொள் என்றனர். 2 நாட்களாக டென்சனாக இருந்தேன். என்னிடம் சொல்லாமல் அந்த முத்தக்காட்சி எடுத்ததை பலமுறை பேட்டிகளில் சொல்லி விட்டேன். இதனால், கமல் சாருக்கு என் மீது கோபம் கூட இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். இப்படி சக நடிகையை சின்ன பெண்ணை ஏமாற்றி முத்தம் கொடுத்துவிட்டு, இவர் பெண் பாதுகாப்பு குறித்து பேசுகிறார் என கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…