பிக்பாஸ் வீட்டில் இருந்து, போட்டியாளர் பிரதீப் ஆண்டனி நேற்று அதிரடியாக வெளியேற்றபட்டார். அவரால், பிக்பாஸ் வீட்டுக்குள் பாதுகாப்பு இல்லை என பெண்கள் தரப்பில் புகார் எழுந்ததால், ரெட்கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டார். ஆனால், இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிரபல போட்டியாளர்ள், பிரதீப்புக்கு ஆதவராக தங்களது கருத்துகளை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சதீஷ் கிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில், இதுதான் இப்போது சிவப்பு அட்டைக்குக் காரணம். அவர் கமலுக்கு எதிரானவர். கமல் சார் அவரிடம் கேள்வி எழுப்பினார், மன்னிக்கவும் என்று கேட்டிருப்பார். அவர் வேற்றுகிரகவாசி அல்ல. எனவே கமல் சார் ஒரு ஜனநாயக திரைக்கதையை உருவாக்கினார்.
அவர்களிடமிருந்து பிரதீப்பை காப்பாற்றினார் கமல் சார். சூப்பர் என குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா தேஷ்பாண்டே தனது பதிவில், நாட் கூல் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நிவா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒருவரை எப்படிக் கேவலப்படுத்துவது, நண்பன் என்று சொல்லி முதுகில் குத்துவது எப்படி? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நீ பார்க்காத ரணங்களும் இல்லை, நீ பார்க்காத வலிகளும் இல்லை, பிரதீப் இதுவும் கடந்து போகும், வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை, வெளியே கிடக்கு வா என்று கவிஞர் சிநேகன் பதிவிட்டு இருக்கிறார். பாவனி ரெட்டி தனது பதிவில், மிகவும் நியாயமற்றது என்றும், அமீர் தனது பதிவில் நியாயமற்றது என்றும் கூறி இருக்கிறார். பிரதீப்பின் நெருங்கிய நண்பர், நடிகர் கவின் வெளியிட்டுள்ள பதிவில், உன்னை அறிந்தவர்கள் எப்போதும் உன்னை அறிவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி, பிரதீப்புக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…