தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். சமீப நாட்களாக இவர் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால்.
கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா பால்.
மேலும், ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு திரைப்படங்களில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கினார்.
நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் குறித்தான கேள்விகளுக்கு, ‘திருமணம் செய்வதில் வெறுப்பு இல்லை. சரியான நபரை சந்தித்து திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆக எனக்கும் ஆசை’ எனத் தெரிவித்து இருந்தார்.
நடிகை அமலா பால் தனது 32வது பிறந்தநாளில் தனது காதலர் ஜெகத் தேசாய் ப்ரொபோஸ் செய்ய அதை ஏற்றுக்கொள்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இன்று கேரளாவின் கொச்சியில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், தனது காதலன் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் இந்த ஜோடி தங்கள் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதை உறுதிப்படுத்தியுள்ளனர். தற்பொழுது இந்த பதிவினை பார்த்த ரசிகர்களும் , பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி நகர்வுகள் குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…