தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ.
இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
உலகம் முழுவதும் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனையும் படைத்தது. 250 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 12 நாள் முடிவில் ரூ. 540 கோடிக்கு மேல் வசூவித்துள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகமாகும் என்றும் கூறி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ‘லியோ வெற்றி விழா’ சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் விஜய், திரிஷா, மிஸ்கின், அர்ஜுன், கௌதமேனன், மன்சூர் அலிகான், பிக் பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டின் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமினாஸ்,
கலை இயக்குனர் சதீஷ்குமார் நடிகர் விஜய்யின் தாய் சோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த லியோ வெற்றி விழாவானது இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நடிகர் விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் லியோ வெற்றி விழா விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தார். இப்புகைப்படங்கள் பகிரப்பட்ட 18 மணி நேரத்திலேயே 3 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…