‘sister’s எப்போதும் பிரெண்ட் ஆ இருக்க முடியாதா?’… அப்படின்னா இதை பாருங்க… பிக் பாஸ் ஆயீஷாவின் தங்கை வெளியிட்ட வைரல் வீடியோ… 

By Begam

Published on:

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆயீஷா. இவர்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்  21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். ஒரு சில நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தார். நடிகை ஆயீஷா ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர்.

   

பிக் பாஸ் வீட்டில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி வைரல் ஆன நிலையிலும், அது பற்றி ஆயிஷா தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆயிஷா அவ்வப்போது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். இவர் தனது காதலனின்  புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலானது. இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார். நடிகை ஆயீஷா அவ்வப்பொழுது தனது தங்கையுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவரது தங்கை பதிவு செய்த ரீல்ஸ் வீடியோவானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Nusrath Nafeesa Seyd (@nu.seyd)