‘தகிட தகிட’ பாடலுக்கு கணவருடன் சேர்ந்து தரமான குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் அனிதா… வைரலாகும் வீடியோ…

By Begam on ஆனி 7, 2023

Spread the love

தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கிய அனிதா சம்பத்  மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார். அதனால் தான்  அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ளும் வாய்ப்பு  கிடைத்தது. எந்த  அளவிற்கு  இவருக்கு  வரவேற்பு  இருந்ததோ அந்த அளவிற்கு  அவருக்கு வெறுப்பு தான்  உருவானது.

   

அனிதா  பேச  ஆரம்பித்தாலே  போதும் வீட்டில்  உள்ளவர்கள்  தெறித்து  ஓடி  விடுவார்கள். தான்  செய்வது தான்  சரி என்ற நோக்குடனேயே  அனைத்தையும்  செய்து வந்தார்.  யாரையுமே  பேச விடாமல் அவர்  செய்த  காரியம்  அனைத்துமே பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் தான் அவர் வீட்டை விட்டு வெளியியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

   

 

பிக் பாஸ்  வீட்டில்  இருந்த  வரையிலும்  அவர்  அதிகமாக  சொன்ன  வார்த்தை  என்னவென்றால்  அது அவரது  கணவர் பெயர் பிரபா தான். இருவரும்  காதலித்து  வந்த  கதை  முழுக்க  சொல்லிக்கொண்டே  இருந்தார். தற்பொழுது இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் பிசியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அனிதா. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும்,ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவில் போல்லவெர்ஸ்களும், ரசிகர்களும் உள்ளனர்.

தற்பொழுது இவர் தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தகிட தகிட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தனது கணவருடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பதிவு செய்ய தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது .இதோ அந்த வைரல் வீடியோ…