உஜ்ஜைனின் ‘மகா காலேஸ்வரர்’ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகை குஷ்பூ… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Begam on ஆனி 7, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் வெற்றிவிழா, சின்னத்தம்பி ஆகிய படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை குஷ்பூ. இதன்பின், ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக ஆனார்.

   

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்துவருகிறார் நடிகை குஷ்பூ.

   

 

 

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுதே  இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கி கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது பாஜக கட்சியின் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் நடிகை குஷ்பு. இவர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பாஜக சார்பில் கலந்து கொண்டார்.

அப்பொழுது அவர் காஞ்சிபுரம் பட்டு சேலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலானது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை குஷ்பு. இவர் அப்பொழுது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் உஜ்ஜைனில் உள்ள மகா காளீஸ்வரர்  சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.