பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தவிர சமீபத்தில் ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் களம் இறக்கியது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்ட அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிடுவிட்டார். தற்போது வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.

#image_title
இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் வீட்டில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 6 ஆவதாக கடந்த வாரம் சிவகுமார் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதாவது போட்டியாளர்கள் devil மற்றும் Angel விளையாட்டு விளையாடுகிறார்கள். இதில் தேவதையாக இருப்பவர்களின் எமோஷனை தூண்டி அவர்களிடமிருந்து ஒரு ஸ்டாரை எடுத்துக்கொள்ளலாம்.

இது தான் போட்டியின் விதி. ஏஞ்சல்களை கோபப்படுத்தி அவர்களிடம் இருக்கும் நட்சத்திரங்களை பேய்கள் வாங்கி சேகரித்தால் அந்த நபருக்கு நாமினேஷன் ப்ரி பாஸ் கொடுக்கப்படும் என பிக்பாஸ் கூறியிருந்தார் பிக்பாஸ். அப்போது திடீரென்று ஜாக்குலினுக்கும் தர்ஷிகாவிற்கும் சண்டை வெடித்துள்ளது. அப்போது தர்ஷிகா இது ஒன்னும் உங்க அப்பன் வீடு இல்ல என்று கோபமாக கத்துகிறார். இதனால் கோபமடைந்த சௌந்தர்யா எதுக்கு டி அவங்க அப்பாவை இழுக்குற என்று சண்டை வெடித்துள்ளது. ஜாக்குலினிற்கு அப்பா கிடையாது என்பதால் சௌந்தர்யா கோபப்பட்டுள்ளார். ஆனால் தர்ஷிகாவிற்கும் அப்பா கிடையாதாம். இந்த புரோமோ வெளியாகியுள்ளது.
Sirappu🤝#BiggBossSeason8Tamil
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 4, 2024
