என்னோட லைஃபை மொத்தமா உடைச்சது அவங்க தான்.. பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் மல்க அழுத அன்ஷிதா..!

By Nanthini on கார்த்திகை 6, 2024

Spread the love

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும் - மனிதன்

   

அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அர்ணவ்  மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக 6 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தது முதலே சற்று அமைதியக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சூடு பிடிக்கத் தொடங்கியது. வீட்டிற்குள் நுழைந்தது முதலே புதுப்புது டாஸ்க், முதல் ஓபன் நாமினேஷன் என வீடே ரெண்டுபட்டு கிடைக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இன்று நடக்கும் சண்டை குறித்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

   

பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேற போவது இந்த பெண் போட்டியாளரா? - தமிழ்  News - IndiaGlitz.com

 

 

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் அன்ஷிதா உருக்கமாக பேசியுள்ளார். தான் சிறுவயதில் இருந்து பல கஷ்டங்களை சந்தித்ததாகவும் செல்லம் அம்மு என்ற வார்த்தைகளை கேட்க வேண்டிய வயதில் கெட்ட வார்த்தைகளை மட்டும் கேட்டு வந்ததாகவும் அழுது கொண்டே பேசியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நான் யார் என்றே தெரியாமல் சோசியல் மீடியா அவர்களுக்கு தோன்றியதை எழுதி என் வாழ்க்கையை மொத்தமா நாசம் பண்ணிட்டாங்க என்று கதறி அழுதுள்ளார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Television இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)