CINEMA
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா பிக்பாஸ் ஷிவானி..? வெளியிட்ட போட்டோசை பார்த்து கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
சிவானி நாராயணன் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்போது இன்ஸ்டாகிராமில் ஷிவானிக்கு 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுக்கும் சிவானிக்கும் இடையே ஒரு லவ் ட்ராக் ஓடியது. ஆனால் அதன் பின்னர் அது நட்பாக மாறியது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி வெள்ளி திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இதனையடுத்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு டிஎஸ்பி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபல காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். பின்னர் பம்பர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார்.
அதன்பிறகு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் போட்டோ ஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். சமீப காலமாக ஷிவானி நாராயணன் பகிரும் போட்டோக்களில் அவரது முகம் மாறியது போல தெரிகிறது.
இதனால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா? முகத்துக்கு என்ன ஆச்சு என நிட்டிசன்கள் கமெண்டில் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் துளியும் மேக்கப் இல்லாமல் ஷிவானி தனது லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனையும் பார்த்து ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர் .