ராசிகற்கள் என்றால் என்ன…? எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்…?

By Meena on ஆகஸ்ட் 29, 2024

Spread the love

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ராசிக்கல் உகந்ததாக கூறப்படுகிறது. அந்த ராசிக்கற்கள் அணிவதால் நமக்கு அதிகப்படியான நேர்மறை சக்திகள் கிடைப்பதாகவும் அதன் மூலம் நல்லது நடைபெறவதாகவும் கூறப்படுகிறது. பலர் தங்கள் கைகளில் விதவிதமாக ராசிக்கல் அணிவதை பார்த்திருப்போம். ஒரு சிலருக்கு ராசிக்கல் அணிவதற்கு ஆசை இருக்கலாம். ஆனால் நமது ராசிக்கு ஏற்ற கல் எது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கலாம். எந்த ராசிக்கு எந்த ராசி கற்கள் அணியலாம் என்பதை பற்றி இனி காண்போம். ஆனால் ஒரு ராசிக்கற்களை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகி உங்களது ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டால் அது கூடுதல் பலன் தரும்.

   

1. மேஷம்
மேஷ ராசிக்கான ராசிக்கல் பவளம் ஆகும். செவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டவர்கள் பவளக்கற்களை அணியலாம். இதை அணிந்தால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். தொழிலில் வெற்றி மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும்.

   

2.ரிஷபம்
ரிஷப ராசிக்கு அதிபதியானவர் சுக்கிரன். அதனால் ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசி கல் வைரம் ஆகும். இது நல்ல அதிர்ஷ்டத்தை உருவாக்கும்.

 

3.மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மரகதம் ஆகும். இந்த ராசிக்கல்லை அணிவதால் அவர்களுக்கு சகல பாக்கியமும் கிடைக்கும்.

4. கடகம்
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசி கல் முத்து. இது செல்வ விருத்தியையும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

5. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசிகள் ரூபி ஆகும். இந்த ராசி கல் வாழ்வில் உயர்வையும் நீண்ட ஆயுளையும் தரும்.

6. கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மரகதம். இது சிறந்த கல்வியையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

7. துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசி கல் வைரம். இது மகிழ்ச்சியையும் யோகத்தையும் தரக்கூடியது. இது வாழ்நாள் முழுவதும் நல்ல வசீகரத்தையும் தரும்.

8. விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம் ஆகும். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

9. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கான ராசிக்கல் புஷ்பராகம் ஆகும். இதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

10. மகரம்
மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசி கல் நீலக்கல் ஆகும். இதை அவர்கள் அணிந்தால் நினைத்தது நடக்கும்.

11. கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசி கல் நீலக்கல். இந்த ராசி கல்லை அவர்கள் அணிந்தால் செல்வ வளம் பெருகும். நல்ல செல்வாக்கு உண்டாகும்.

12. மீனம்
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசி கல் கனக புஷ்பராகம் ஆகும். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.