மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு எடுத்த முடிவு… அதிரடி அரசாணை வெளியீடு…

Spread the love

பெண்களுக்கு நம் நாட்டில் முழுமையான பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத சில கொடூரமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதை பார்க்கும் பொழுதெல்லாம் மக்களின் மனம் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் மனம் பதறுகிறது. அந்த அளவுக்கு கொடூர குற்றச் செயல்கள் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அதற்குப் பிறகு துன்புறுத்துவது மட்டும் இல்லாமல் கொலை செய்வது போன்ற செயல்கள் அச்சமின்றி இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இதற்கு என்னதான் முடிவு என்று கேட்டால் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காக குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தமிழக அரசு ஒரு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. அது என்னவென்றால் மாணவிகளுக்கு தற்காப்பு கலையை பயிற்சி அளிக்கும் ஒரு முன்னெடுப்பை எடுத்து அதனுடைய அரசாணையும் வெளியிட்டு இருக்கிறது.

அரசு உதவி பெறும் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் இருக்கும் பெண் குழந்தைகள் அல்லது மாணவிகளுக்கு உடனடியாக தற்காப்பு கலையை கற்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்காக ரூ. 1.12 கோடி நிதியை ஒதுக்கி இருக்கிறது. இதன் மூலம் 1400 மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை கண்காணிக்கவும் திட்டமிடவும் மாவட்ட சமூக நல ஆர்வலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

26 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

41 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

44 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

48 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

52 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

55 minutes ago