6 நிமிடத்தில் 43 அடி… பியூட்டி பார்லரில் அலறிய உரிமையாளர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி சங்கர் கத்ரி குடிநீரில் ஏதோ ஒரு போதைப்பொருளைக் கலப்பதாக அங்கு பணிபுரியும் நான்கு பெண் ஊழியர்கள் சந்தேகித்துள்ளனர். கடந்த ஜூன் 29 அன்று, அவர்கள் தங்களின் மொபைல் போன் மூலம் ரகசியமாகக் கண்காணித்தபோது, உரிமையாளர் தண்ணீரில் ஏதோ ஒரு பொருளைக் கலப்பது கேமராவில் பதிவானது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்கள், வெறும் ஆறு நிமிடங்களில் சுமார் 43 முறை செருப்பால் அவரை அடித்ததோடு, இச்சம்பவம் குறித்த வீடியோ ஆதாரத்துடன் ராஜ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள பார்லர் உரிமையாளர், கடந்த சில நாட்களாகத் தனது தொழில் சரியாக நடக்காததால், ஆன்மீகக் காரணங்களுக்காகவும் பார்லர் செழிக்கவும் மட்டுமே தண்ணீரில் கங்காஜலத்தையும் (புனித நீர்) பார்லர் வளாகத்தில் மஞ்சள் கடுகையும் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.