Categories: சினிமா

இளையராஜா முதல் பாரதிராஜா வரை.. தமிழ் திரையுலகில் தன் பிள்ளைகளை கண்முன்னே பறிகொடுத்த தந்தைகள்..!

Spread the love

தமிழ் திரையுலகில் பிரபலங்களின் மரணம் என்பது எதிர்பாராத விதமாக நிகழ்ந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக மாரடைப்பால் பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது. சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அதைவிட கொடுமையானது தாங்கள் உயிரோடு இருக்கும்போதே தங்கள் பிள்ளைகளை கண்முன்னே பறி கொடுப்பதுதான். அப்படி தமிழ் திரை உலகில் தங்களுடைய குழந்தைகளின் மரணத்தை பார்த்து கலங்கிய பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இயக்குனர் பாலசந்தர் மகன்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான கே பாலசந்தர் முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் இவருடைய மூத்த மகன் பால கைலாசம் கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தன் கண்முன்னே மகனை பறிகொடுத்த பாலசந்தரின் சோகம் அனைவரையும் கலங்க வைத்தது மட்டுமல்லாமல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

விவேக் மகன்:

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக அனைவரையும் கட்டி போட்டவர் தான் விவேக். இவருடைய நற்குணங்களும் நடிப்புத் திறமையும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்தது. 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய 59 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மகன் கடந்த 2015 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பிரபுதேவா மகன்:

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் என அனைத்து திறமையும் கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு புகழை நிறுத்தியவர் தான் பிரபுதேவா. இவருடைய முதல் மனைவி லதாவுக்கும் இவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதில் மூத்த மகனான பசவ ராஜூ சுந்தரம் கடந்த 2008 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். தற்போது பிரபுதேவா தனது இரண்டு மகன்களையும் பார்த்து வரும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

விஜய் ஆண்டனி மகள்:

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 16 வயதான மீராவின் இறப்பால் விஜய் ஆண்டனி பெரிதும் பாதிக்கப்பட்டார். இந்த துன்பகரமான நிகழ்விலிருந்து தன்னை மீட்டெடுத்து தற்போது விஜய் ஆண்டனி பாசிட்டிவாக இருந்து வருகின்றார்.

இளையராஜாவின் மகள்:

இசை சாம்பவான் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தனது குழந்தை தன்மையான குரலால் பல இனிமையான பாடல்களை பாடிய பவதாரிணி இலங்கையில் புற்றுநோய் கே சிகிச்சை எடுக்கச் சென்று இருந்தார். சிகிச்சை முடிந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருடைய இறப்புச் செய்தி வந்து அனைவரையும் கலங்க வைத்தது. மகளின் இறப்பு இளையராஜாவை பெரிய அளவில் பாதித்தது. இசை மீது இருந்த ஆர்வத்தால் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது வருத்தமழைப்பதாக இளையராஜா வேதனை தெரிவித்திருந்தார்.

பாரதிராஜா மகன் :

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இதய சிகிச்சை சென்று வீடு திரும்பிய இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அவர் உயிர் பிரிந்து உள்ளது. மனோஜ் பாரதிராஜாவுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய திடீர் மரணம் பாரதிராஜாவை பெரிதும் பாதித்துள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ ரூ.3,50,00,00,000 கோடியா?…. டாஸ்மாக்கில் நேற்றைய விற்பனை எவ்வளவு தெரியுமா?… அதிர்ச்சியில் தமிழகம்…!

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் மற்றும் தேர்தல் நாளன்றும் என மொத்தம்…

4 seconds ago

இன்றே கடைசி நாள்..! இனி குண்டுகளை எறிவோம்… ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பால் அரண்டுபோன ஈரான்… நடக்கப்போவது என்ன..?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டுடனான விவகாரத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்றைக்குள் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்…

1 minute ago

கஞ்சா போதையில் முதியவரை அடித்தே கொன்ற கும்பல்…. தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் வேண்டுமென்றே…

6 minutes ago

பகீர்..! “வா உனக்கு ஒரு சர்பிரைஸ்” ஆசையாக அழைத்து சென்ற காதலி.. கண்ணைக் கட்டி காதலனை உயிரோடு எரித்த கொடூரம்.. பெங்களூர் நடுங்கிப்போச்சு..!!

பெங்களூருவில் உள்ள தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பிரேர்ணா (27) என்ற பெண், அதே கடையில் தன்னுடன் பணிபுரிந்து வந்த…

16 minutes ago

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

11 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

11 மணத்தியாலங்கள் ago