Categories: சினிமா

பாரதிராஜா மட்டும் அதைப் பண்ணியிருந்தால் சிரஞ்சீவி தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக வந்திருப்பார்… ஜஸ்ட் மிஸ்ஸு!

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம்.

ஆனால் சிரஞ்சீவியை விட சுதாகர் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதால் அவரையே தேர்வு செய்துள்ளார். அதுபற்றி பேசியுள்ள பாரதிராஜா “சிரஞ்சீவி வந்தான். ஆனால் சுதாகர் என்னை ஏமாற்றி விட்டான். அவனிடம் வேட்டியைக் கொடுத்து பாண்டி பஜாரில் நடக்க விட்டேன். பொருத்தமாக இருந்தான். அதனால் சிரஞ்சீவிக்குப் பதில் சுதாகரையே நடிக்க வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரானார். ஒருவேளை பாரதிராஜா ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்கு சிரஞ்சீவியைத் தேர்வு செய்திருந்தால் அவர் தமிழ் சினிமாவிலேயே கமல், ரஜினி போல வந்திருக்கலாம்.

கிழக்கே போகும் ரயில் படத்தில் கதாநாயகனாக நடித்த சுதாகரும் பெரிய நடிகராக வரவில்லை. அதன் பின்னர் சில ஆண்டுகளில் காமெடியன் ஆகி தற்போது சினிமாவில் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத அளவுக்குப் போய்விட்டார்.

vinoth

Recent Posts

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

1 minute ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

8 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

13 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

14 minutes ago

“அரசாங்க சொத்துன்னு பார்த்ததில்லை.. டாஸ்மாக்கை தீ வச்சேன்”… பெரம்பூரில் ‘புரட்சி’ கிளப்பும் திலகபாமா… அதிர்ந்த தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…

26 minutes ago

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

38 minutes ago