சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் மிமிக்ரி செய்பவராகவும் தனது கேரியரை ஆரம்பித்தவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது உழைப்பினால் விடாமுயற்சியினால் மட்டுமே இன்று வெற்றியாளராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.விஜய் டிவியில் நடித்ததன் மூலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்க பெற்ற சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
#image_title
அதை தொடர்ந்து பல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பிரபலமான நடிகரானார் சிவகார்த்திகேயன். தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்த திரைப்படம் அமரன் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
#image_title
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைக்கப்பட்டு உருவான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வெற்றி நடை போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களிடையே நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது அமரன் திரைப்படம். இருக்க இருக்க படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
#image_title
முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயன் படங்களிலேயே முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படமாக அமரன் மாறியது. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது 25 நாட்கள் ஆகின்ற நிலையில் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூபாய் 315 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…