Categories: சினிமா

தமிழ் சினிமாவில் முதல்முதலாக ஒரு படத்துக்கு இசையமைத்த பெண் யார் தெரியுமா? அட இவர் ஒரு லேடி கமல்ஹாசன் போலயே!

Spread the love

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுமதி. தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் சுயமரியாதை கொண்டவர். எம் ஜி ஆரையே மிஸ்டர் எம் ஜி ஆர் என்று பேர் சொல்லி அழைக்கக் கூடியவர். அதுபோல பலரையும் தூக்கியெறிந்து பேசக் கூடியவர். ஆனால் அவர் பக்கம் நியாயம் இருக்கும் என்பதால் அவருக்கான வாய்ப்புகள் குறையவில்லை.

ஆனால் இவ்வளவு சுயமரியாதையோடு இருந்த பானுமதி, தன்னுடைய காதலுக்காக பல தியாகங்களை செய்து ஒரு அக்மார்க் குடும்பப் பெண்ணாக மாறிய சம்பவமும் நடந்ததுண்டு. பானுமதி நடித்த ஹிட் படங்களில் ஒன்று கிருஷ்ண லீலா. அப்போது புகழின் உச்சத்தில் இருந்தார் பானுமதி. ஆனால் அந்த படத்தின் உதவி இயக்குனரான ராமகிருஷ்ணா என்பவரைக் கண்டதும் காதல் கொண்டார் பானுமதி.

#image_title

அதனால் சினிமாவை விட்டே விலகி சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். அதன் பின்னர் நடிக்கவந்து மீண்டும் கலக்கினார்.  அப்படி வந்தவர் நடிக்க மட்டும் செய்யாமல் படங்கள் இயக்கவும் செய்தார். அதுமட்டுமில்லாமல் இசைத்துறையிலும் இவர் கலக்கினார். தொடக்கக் காலம் முதலே இவர் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

ஆனால் இவரின் தனிப்பட்ட சாதனை என்று சொல்லவேண்டுமென்றால் தமிழ் சினிமாவில் முதல் முதலாக ஒரு படத்துக்கு இசையமைத்த பெண் இசையமைப்பாளர் இவர்தான். அவர் இப்படியும் ஒரு பெண் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன்பின்னர்தான் தமிழ் சினிமாவில் ஏ ஆர் ரெஹானா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் இசையமைப்பாளர்கள் வந்தார்கள். ஆனால் இவர்கள் யாருமே இதுவரை ஆண் இசையமைப்பாளர்களுக்கு போட்டி என்று சொல்லக் கூடிய அளவுக்கு வளரவில்லை என்பதுதான் சோகம்.

vinoth

Recent Posts

டெல்லியில் இருந்து வந்த சிக்னல்… விஜய்க்கு கை கொடுத்த ராகுல்… அரசியல் ஆட்டம் இப்பதான் சூடு பிடிச்சிருக்கு…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம், வெறும் ஆட்சி மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு மிகப்பெரிய அதிகார மைய மாற்றமாகவும்…

4 minutes ago

“துணை முதல்வர் ஆகும் செங்கோட்டையன்”… விஜய் வைத்திருக்கும் எதிர்பாரா கிஃப்ட்… கோட்டையை அதிரவைக்கும் தவெக-வின் அடுத்த மூவ்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நகர்ந்துள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி…

8 minutes ago

அடுத்த அதிரடி… விஜய் உடன் கூட்டணி… சற்றுமுன் அன்புமணி அவசர ஆலோசனை…..!

பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன்…

13 minutes ago

“இரண்டு முறை இறந்து பிழைத்த பெண்!”… 20 விநாடிகள் நின்ற இதயம்: மருத்துவ உலகையே வியக்க வைத்த மிராக்கிள் சம்பவம்… ஒரு தாயின் உயிர்ப்போராட்டம்…!!!

"ஜாக்கோ ரகே சையன், மார் சகே நா கோயி" என்ற பழமொழிக்கேற்ப, மரணத்தின் பிடியிலிருந்து இரண்டு முறை மீண்டு வந்து…

15 minutes ago

“வெற்றியில் மட்டுமல்ல… தோல்வியிலும் உங்களோடு இருப்பேன்!”… சோகத்தில் இருந்த ஸ்டாலின்… ஓடோடி வந்து ஆறுதல் சொன்ன சூப்பர் ஸ்டார்… அரசியலை மிஞ்சிய நட்பு…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில்…

25 minutes ago

“விஜய்யுடன் கைகோர்க்கும் அன்புமணி?”… பனையூரில் அதிரடி ஆலோசனை… NDA கூட்டணியில் இருந்து விலகுகிறதா பா.ம.க?… தமிழக அரசியலில் உருவாகும் புதிய மெகா கூட்டணி…!!!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைப்பது குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…

36 minutes ago