#image_title
சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவருக்குப் பிறகு அவரது குடும்பத்தில் இருந்து கார்த்திக் ராஜா, பவதாரணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தனர். இதில் கார்த்திக் ராஜாவுக்கு எல்லா திறமைகளும் இருந்தும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக வரமுடியவில்லை. பவதாரணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளார்.
#image_title
ஆனால் இளையராஜாவின் வழியில் வெற்றிகரமான இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் அவரின் கடைசி மகனான யுவன் ஷங்கர் ராஜாதான். அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், தற்போது கோட் படம் வரை நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய சகோதரர்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோருடனான உறவு குறித்து பேசியுள்ளார். அதில் “எங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்( கங்கை அமரன்) இடையே ஒருமுறை சண்டை வந்து பிரிந்திருந்தார்கள். ஆனால் அப்போது கூட நான் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி கூட சேர்ந்து வேலை பார்த்தேன். பெரியவர்கள் சண்டை எல்லாம் நாங்கள் கண்டுகொள்வதில்லை. எனக் கூறியுள்ளார்.
#image_title
வெங்கட்பிரபு இயக்கிய எல்லா படங்களுக்கும் யுவன்தான் இசை. அதே போல யுவன் சங்கர் ராஜாவின் உதவியாளராக பிரேம்ஜி பல படங்களில் வேலை செய்துள்ளார். யுவன் இசையில் சில பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…