இதுதான் உங்க வாழ்க்கையில் நடக்கும்.. எம்ஜிஆருக்கு அன்றே ஜோதிடம் பார்த்த பானுமதி.. பின்னாளில் அப்படியே பளிச்சிடுச்சு..!

By Nanthini on சித்திரை 19, 2025

Spread the love

சினிமாவில் ஹீரோவாக நடித்து அரசியலில் மிகப்பெரிய அளவுக்கு செல்ல வேண்டும் என்று தற்போது பல நடிகர்கள் ஆசைப்படுவதற்கு விதை போட்டவர் எம்ஜிஆர் தான். அவரால்தான் பல நடிகர்களுக்கும் முதலமைச்சர் ஆகும் எண்ணம் ஏற்பட்டது. அதேநேரம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போதும் சரி சினிமாவில் நடித்த கொண்டிருந்த போதும் சரி எம்ஜிஆர் இருக்கு அரசியல் ஆசையெல்லாம் இருந்ததே கிடையாது. அதிலும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என அவர் ஆசைப்பட்டதே இல்லை. காலத்தின் போலும் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. ஆனால் எம்ஜிஆர் அந்த நிலைக்கு செல்வார் என்று அப்போதே அவருடன் நடித்த நடிகை ஒருவர் ஜோதிடம் சொன்னார்.

எம்ஜிஆர் மாதிரியே இருக்கும் இந்த நபர் யார்.. வைரலாகும் புகைப்படம்.? - Tamil  Spark

   

அதாவது நடிகை பானுமதிக்கு கை ஜோதிடம் பார்க்க தெரியும். ஒரு நாள் படபிடிப்பில் எம் ஜி ஆர் தலையில் கிரீடத்துடன் அதாவது மன்னர் வேடத்தில் எம்ஜிஆர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவரை சற்று நேரம் அப்படியே உற்று பார்த்துக் கொண்டிருந்த பானுமதி எம்ஜிஆரின் அருகில் சென்று ராமச்சந்திரன் உங்கள் கையை கொடுங்கள் நான் ஜோதிடம் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே எம்ஜிஆர் வேண்டாம் மாமா எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

   

இதுதான் நடக்கும்!. எம்.ஜி.ஆருக்கு பானுமதி சொன்ன ஜோதிடம்!.. அட அப்படியே  பலிச்சிடுச்சே!...

 

ஆனால் அருகில் இருந்தவர்கள் எல்லாம் அவரை வற்புறுத்திய நிலையில் ஒரு வழியாக எம்ஜிஆர் பானுமதி இடம் கையை நீட்டினார். அவரின் ரேவையை பார்த்து கணித்த பானுமதி ராமச்சந்திரன் பின்னாளில் நீங்கள் பேரும் புகழும் பெற்ற பெரிய தலைவராக வருவீர்கள், அது சினிமாவில் இல்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட எம்ஜிஆர் கைகூப்பி நன்றி அம்மா என்று தெரிவித்துள்ளார். அன்று பானுமதி சொன்னது போலவே பின்னாளில் எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகவும் இந்தியாவிலேயே மதிக்கத்தக்க ஒரு தலைவராகவும் மாறினார்.

எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி: சில நினைவுகள்

எம்ஜிஆர் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற போது அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பானுமதியும் கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் பேசிய எம் ஜி ஆர் முன் வரிசையில் இருந்த பானுமதியை பார்த்து நான் இந்த நிலைக்கு வருவேன் என நானே நினைக்காத காலத்தில் என் கைரேகையை பார்த்து பானுமதி சொன்னதை இன்று படைத்து விட்டது என்று சொல்ல கூட்டத்தில் இருந்து அனைவரும் நீண்ட நேரத்திற்கு கைதட்டினர்.