‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மாற்றப்பட்ட நடிகர்… மாத்தி மட்டும் என்ன பிரயோஜனம் இருக்கு..? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..

By Begam on மார்கழி 13, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஆனது சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது .இந்த சீரியலில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்  தன் குடும்பத்திற்காக எவ்வளவு தியாகங்கள் செய்கிறார், எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறார், ஒரு பெண் எப்படி தைரியமாக நடந்து கொள்ள வேண்டும் என பல்வேறு உதாரணங்களை இந்த சமூகத்திற்கு எடுத்துக் கூறுகிறது.

   

பாக்யா கதாபாத்திரத்தில் தனது  நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை சுசித்ரா. இந்த சீரியல் மூலம் இவருக்கு ஒரு நல்ல அடையாளம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் கோபி காதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளார்.

   

 

தற்பொழுது இந்த சீரியலில் ஜெனி செழியனை பிரிந்து அவரது அம்மா வீட்டில் உள்ளார். அமிர்தா- எழில் வாழ்க்கையிலும் அமிர்தாவின் முதல் கணவர் வந்த விவகாரம் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் தற்பொழுது அரசு காண்ட்ராக்ட் ஒன்றை எடுத்துள்ளார் பாக்கியா. அதிலும் ஒரு பிரச்சனையை சந்தித்தார் .கெட்டுப்போன உணவை வழங்குவதாக காண்ட்ராக்ட் கிடைக்காத ஒருவர் பாக்கியா மீது பழி போட்டார்.

ஆனால் அந்த பிரச்சினையை தைரியமாக சமாளித்து வெற்றியும் கண்டார் பாக்யா. இந்நிலையில் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது ஜெனியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகருக்கு பதிலாக, ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தற்பொழுது கமிட்டாகியுள்ளார். இவரை மாத்தி மட்டும் என்ன பிரயோஜனம் என ரசிகர்கள் தற்பொழுது கமெண்ட்ஸில் கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mask_kanmani (@mask_kanmani_official)