Connect with us

CINEMA

அதை மட்டும் avoid பண்ணி 15 கிலோ வரை எடையை குறைத்த நடிகர் அஜித்.. ஸ்லிம் சீக்ரெட் இதுதானா..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது ‘விடா முயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சூட்டிங் சமீபத்தில் சமீபத்தில்  அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சற்று ஓய்வு எடுப்பதற்காக  சென்னை வந்துள்ளார் நடிகர் அஜித்.

   

இவரை அவ்வளவாக நாம் பொதுவெளிகளில் பார்க்க முடியாது .அவரை பொது வழி என்று ஒன்று வைத்து பார்க்க வேண்டும் என்றால் அது விமான நிலையம் மட்டும் தான். அவ்வப்பொழுது  நடிகர் அஜித் விமான நிலையங்களில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி விடும். அப்படித்தான் சமீபத்தில் கூட ஒரு புகைப்படம் வெளியானது. அதில் நடிகர் அஜித் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக காணப்பட்டார்.

‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை இவ்வளவு குறைத்துள்ளாரே? என்று ரசிகர்களும் ஆச்சரியமாக அந்த புகைப்படத்தை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் மீண்டும் தற்பொழுது நடிகர் அஜித் நடிகர் ஆரவ்வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரலாகி வருகிறது. இப்படி நடிகர் அஜித்தின் ஸ்லிம் லுக் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தகவல் ஒன்றும் இணையதில் வெளியாகியுள்ளது.

ஆம். நடிகர் அஜித் தற்பொழுது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அதற்காக அவர் ஒரு பிளானையும் செயல்படுத்தி வருகிறாராம். அதாவது நடிகர் அஜித் தற்பொழுது சுத்தமாக அசைவ உணவுகளை உண்பதே கிடையாதாம். இதனால் தான் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டார் என்று கூறிவருகின்றனர். நடிகர் அஜித்துக்கு பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. அவருக்கு அந்த உணவு மிகவும் பிடிக்கும். ‘இப்படி தனது உடல் எடையை குறைக்க ஃபேவரட் உணவையே தியாகம் செய்துவிட்டாரே’ என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top