Categories: சினிமா

படம் உருவாகும் போதே அதன் கதையை பத்திரிக்கையில் வெளியிட்ட பாக்யராஜ் & கமல்ஹாசன்.. எந்தந்த படங்கள் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சுவரில்லாத சித்திரங்கள் மற்றும் ஒரு கை ஓசை போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும், அவருக்கு நல்ல இயக்குனர் என்ற அந்தஸ்த்தை பெறவில்லை. அவருக்கு அப்படி ஒரு அந்தஸ்த்தைப் பெற்றுத்தந்த படம் என்றால் அது அவரும் சரிகாவும் சேர்ந்து நடித்த மௌன கீதங்கள் திரைப்படம்தான்.

அந்த படம் ஒரு கணவன் மனைவிக்கு இடையே நடக்கம் ஊடல் கலந்த பிரச்சனைகளை பேசிய படமாக அமைந்தது. இந்த படம்தான் அவர் இயக்கத்தில் வெள்ளிவிழா கண்ட முதல் திரைப்படம். இந்த படத்தை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கும்போது அதன் கதையைப் பத்திரிக்கையில் வெளியிட்டாராம். படத்தின் கதை முழுவதும் தெரிந்தும் அந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வெள்ளி விழாக் கண்டது. தனது திரைக்கதையின் மேல் உள்ள நம்பிக்கையால்தான் துணிந்து கதையை பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

அதே போல கமல்ஹாசன் விக்ரம் படத்தை எடுக்கும் போதே, அந்த படத்தின் எழுத்தாளர் சுஜாதாவை விக்ரம் தொடர் நாவலை பிரபல பத்திரிக்கையில் எழுத சொல்லியுள்ளார். அவரும் அப்படி எழுத நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு படம் வெளியான போது அதற்குக் கிடைக்கவில்லை.

vinoth

Recent Posts

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

7 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

12 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

15 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

20 minutes ago

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

26 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

30 minutes ago