Categories: சினிமா

நான் கஷ்டப்பட்டு நடிச்சா, ராமராஜன் ஈஸியா என்ன விட மூன்று மடங்கு லாபம் பாத்துட்டார்- கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம் போன்ற படங்களே அதற்கு உதாரணம். அதே போல அவர் கஷ்டப்பட்டு உருவாக்கிய படங்களில் வெற்றி பெற்ற திரைப்படம்தான் அபூர்வ சகோதரர்கள்.

அந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த கமல்ஹாசன், ஒரு வேடத்தில் குள்ளமானவராக நடித்தார். அந்த படத்துக்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டு பல தந்திரமான ஷாட்களில் நடித்து அந்த வேடத்தில் நடித்தார். அது இப்போது வரை ரசிகர்களால் வெகுவாக சிலாகிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸின் போது வெளியான ராமராஜனின் கரகாட்டக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அபூர்வ சகோதரர்கள் படத்தை விட அதிக வசூல் செய்து கலக்கியது. இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் “நான் கஷ்டப்பட்டு கையைக் காலைக் கட்டிக் கொண்டு நடித்தால், சகோதரர் ராமராஜன் தலையில் ஒரு கரகத்தை வைத்துக் கொண்டு என்னை விட மூன்று மடங்கு அதிக வசூலை செய்துவிட்டார்” என்று ஜாலியாகப் பேசியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள் படம் கரகாட்டக்காரன் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் இன்றளவும் கல்ட் கிளாசிக் படமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

8 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

19 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

27 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

34 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

38 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

43 minutes ago