Categories: சினிமா

என் வாழ்க்கையிலேயே நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு நடிகன் ஆனதுதான்… எமோஷனலாக பேசிய ரகுவரன்… கடைசி கால ஆசை!

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கியவர்  ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஏழாவது மனிதன் திரைப்படம் 80 களில் அதிகமாக வந்த இடதுசாரி கருத்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகும்.

#image_title

இந்த படத்தின் மூலம் ஹீரோவாக ரகுவரனுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெறாததால் ரகுவரனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால்தான் அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த சிவா, சம்சாரம் அது மின்சாரம், புரியாத புதிர், அஞ்சலி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தன. ரஜினியோடு அவர் நடித்த பாட்ஷா திரைப்படம் அவரைப் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம்.

புகழின் உச்சியில் இருந்த அவர் போதைப் பழக்கங்களுக்கு ஆளானதால் அவரின் உடல்நலம் கெட்டுப் போனது. இதனால் அவரது மனைவி ரோஹினியும் அவரைப் பிரிந்தார். அந்த பழக்கங்களில் இருந்து அவர் விடுபட்டு வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய போது அவர் மாரடைப்பு வந்து காலமானார். தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை அவரின் 50 வயதுக்குள்ளாகவே இழந்தது.

#image_title

இந்நிலையில் கடைசி காலத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் பேசும்போது “நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறே நடிகன் ஆனதுதான். எங்கோ ஒரு ஊரில் கொஞ்சம் நிலத்தை வைத்துக் கொண்டு, அதில் பயிர் செய்து, அந்த பயிர் வளர்வதை பார்த்து  சந்தோஷப்பட்டு, விளைவதை வைத்து கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, ஆடு மாடுகளை வளர்த்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி வாழ்வதுதான் வாழ்க்கை. நான் அதை இழந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago