அமைச்சர் பதவி காலி?… முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அந்த ‘ஒற்றை’ அதிரடி முடிவு… அமைச்சர் சரத்குமார் வீடியோவின் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் உண்மை…!

By Visaka on ஆனி 29, 2026

Spread the love

தமிழக மனிதவளத்துறை அமைச்சர் ‘கில்லி’ சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பழைய வீடியோ ஒன்று தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தாம்பரம் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவையில் இடம் பிடித்தவர் சரத்குமார். சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்து கொண்டு, ஏடிஎம் கார்டு மற்றும் 500 ரூபாய் நோட்டைக் கொண்டு வெள்ளை நிற பவுடர் ஒன்றை அவர் ஒழுங்குபடுத்துவது போன்ற இரண்டு வருடங்களுக்கு முந்தைய வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சரத்குமாரின் அமைச்சர் பதவி எந்த நேரத்திலும் பறிபோகலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் சரத்குமார், தனது குழந்தைக்கு சளி மாத்திரையை விழுங்க முடியாததால், அதை நொறுக்கி பவுடராக்கவே அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த விளக்கம் பொதுமக்களிடையேயும் எதிர்க்கட்சிகளிடையேயும் திருப்தியை ஏற்படுத்தவில்லை. மாத்திரையை நொறுக்கும் விதம் போதைப்பொருள் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் செய்வதைப் போல இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பெண் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் என்பவர் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார். மேலும், அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணியினர் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

   

கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அழுத்தம் அதிகரித்துள்ளதால், அமைச்சர் சரத்குமார் தவெக பொதுச் செயலாளர் ஆனந்தைச் சந்தித்து, இது தன் மீது திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் சதி என்று முதல்வர் விஜய்யிடம் எடுத்துரைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், இந்த விஷயத்தில் இறுதி முடிவை முதல்வர் விஜய்யே எடுப்பார் என ஆனந்த் கறாராகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தலைமைக்குப் பரிந்துரைத்துள்ளனர். இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கும் அமைச்சர் மீது, தூய்மையான நிர்வாகத்தை வலியுறுத்தும் முதல்வர் விஜய் எந்த நேரத்திலும் அதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.