அட பாவமே… “சந்தேக பேய்…” குடும்பத் தகராறு… மனைவி மற்றும் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… சுத்தியலால் அடித்துக் கொன்ற அரக்கன்… பெங்களூரில் கோர சம்பவம்…!

By Visaka on ஆவணி 1, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் அண்ட்ரலு கிராமத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையை இளைஞர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தைச் சேர்ந்த கன்னுரு சாமி என்பவருக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் இருந்தனர். ராஜேஸ்வரியின் நடத்தையில் கன்னுரு சாமி தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்ததால், இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த கன்னுரு சாமி, வீட்டில் இருந்த சுத்தியலால் தனது மனைதியையும், 7 மாத குழந்தையையும் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்தார். இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அவர் சரணடைந்த நிலையில், தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.