நடிகைகள் ஈஷா செல்ல காரணம் இதுதான் ; உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்

By Deepika

Updated on:

கோவையில் ஈஷா யோகா மையத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார். அந்த யோகா மையத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தாலும் அங்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை பலரும் தொடர்ந்து செல்கிறார்கள். அதிலும் சிவராத்திரி வந்தால் அங்கு லட்சக்கணக்கானோர் கூடுவார்கள்.

   

சமீபத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில்கூட தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

 

சந்தானமோ கண்ணீர் விட்டபடி பக்தியில் உருக, பூஜா ஹெக்டேவோ உச்சக்கட்ட வைபில் நடனம் ஆடவும் செய்தார். இவர்கள் மட்டுமின்றி கடந்த வருடங்களில் சமந்தா உள்ளிட்டோரும் நடனம் ஆடிய வீடியோ ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சந்தானம் அழுத புகைப்படம் பெரும் ட்ரோலுக்கு உள்ளானது.

 

இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஈஷா யோகா மையத்திற்கு நடிகைகள் ஏன் செல்கிறார்கள் என்பது குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் வீடியோவில், “நான் எப்போதும் ஒரு விஷயத்தில் சர்ச்சை இருக்கிறதா என்பதை தேடுபவன். அப்படி ஏதாவது கிடைக்கும் என்றுதான் நான் ஈஷா யோகா மையத்துக்கு சென்றேன். ஆனால் அப்படி எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. மாறாக பாசிட்டிவிட்டி வைப்தான் கிடைத்தது.

எவ்வளவுதான் பணம் சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்தாலும் ஒரு மனிதனுக்கு நிம்மதிதான் முக்கியம். அந்த நிம்மதியை தேடித்தான் நடிகைகள்,நடிகர்கள் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

author avatar
Deepika