தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிய விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு உருவான மதகஜராஜா திரைப்படம் சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் கைகள் நடுக்கத்துடன் கண்கள் சிவந்தபடி இருந்தார். அவர் பேச்சிலும் தடுமாற்றம் இருந்ததால் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் சார்பாக அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் விஷாலுக்கு உண்மையான பிரச்சினை என்ன என்பது குறித்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களையும் அவர்களுக்கு தெரிந்த உண்மைகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
அதன்படி youtube பிரபலம் பயில்வான் ரங்கநாதன் விஷால் குறித்து பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விஷால் முதன்முதலில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு தான் சினிமாவுக்கு வந்தார். உதவி இயக்குனராக அர்ஜுனிடம் பணியாற்றிய அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் நடிக்க தொடங்கி படிப்படியாக நடிகராகவே முன்னேறி விட்டார். இவர் பாட்டுக்கு நடித்து முடித்துவிட்டு சம்பளத்தை வாங்கிட்டு அடுத்தடுத்த வேலையை பார்த்துகிட்டு இருந்திருந்தா எந்த ஒரு பிரச்சனையும் வந்திருக்காது. ஆனால் நடிகர் சங்கம் பொறுப்பை ஏத்துக்கிட்ட பிறகு அங்கிருந்த மொத்த பணத்தையும் சொரண்டி அழிச்சிட்டாரு. அது மட்டும் இல்லாமல் நடிகர் சங்கம் கட்டி முடித்த பிறகு தான் தனக்கு கல்யாணம் என்ற வார்த்தையையும் விட்ட அவர் இன்று வரை மொட்டையாகவே உள்ளார்.
அதனைப் போலவே ராதிகா ஒரு கிரிக்கெட் கிளப்பில் முதலீடு செய்ய விஷாலும் அதற்கு துணையாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் எல்லாமே நஷ்டத்தில் முடிந்ததால் விஷால் ஹோட்டலில் பெண்களுடன் குடியும் கும்மாளமுமாக இருந்தார். இதனாலையே ராதிகாவுக்கும் விஷாலுக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. சினிமா வாழ்க்கை இப்படி இருக்க தனிப்பட்ட வாழ்க்கையிலும் விஷால் முதலில் வரலட்சுமி சரத்குமாரை காதலித்தார். தன் வீட்டுக்கு லட்சுமி கரமான ஒரு பெண் தான் மருமகளாக வரப்போகிறார் என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதால் அதன் பிறகு கும்கிநாயகி லட்சுமிமேனனுடன் உறவில் இருந்தார். குடும்பப் பெண்ணாக இருந்த அவரை குத்தாட்டம் போடும் அளவுக்கு கொண்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் உஷாரான லட்சுமிமேனன் விஷால் இடம் இருந்து தப்பிவிட்டார். பிறகு தெலுங்கு நடிகை ஸ்ரீஷெட்டி உடன் உறவிருந்த விஷால் அவரிடம் சாபம் வாங்கிக் கொண்டு தான் வெளியே வந்தார். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை விஷால் நாசம் செய்து விட்டார். மேலும் வீட்டில் பார்த்த பெண்ணும் நிச்சயதார்த்தம் வரை சென்று கல்யாணம் அத்துடன் நின்று விட்டது. பல பெண்களின் சாபம் தான் விஷாலின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். அதனைப் போலவே விஷாலின் நெருங்கிய நண்பர்களான தெலுங்கு நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா இருவரும் விஷாலை குடிக்க அடிமையாக்கி இந்த அளவுக்கு கொண்டு வந்து நிப்பாட்டி விட்டனர்.
எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் குடி இல்லாமல் விஷால் இருந்ததே இல்லை. ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு பெரிய நோயாக மாறிவிட்டது. ரத்தத்தில் முழுவதும் ஆல்கஹால் கலந்து விட்டதால் விஷால் இப்படியான நிலையில் இருக்கிறார். மற்றொரு பக்கம் அவன் இவன் படத்தில் நடிக்க பாலா விஷாலின் கண்ணை தைத்ததால் விஷாலுக்கு பாதிப்பு இன்னும் அதிகமானது. இப்படி விஷாலின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நிகழ்ந்ததால் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார். மற்றவர்களைப் போல இவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…