Categories: சினிமா

சம்பவம் பண்ணாரா ஷங்கர்.. கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Spread the love

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். தமானிசையமைத்த இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் உருவாக்க மட்டும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 75 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பட குழு தெரிவித்திருந்தது. சங்கரின் முந்தைய திரைப்படமான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் படு தோல்வியாக மாறியது. இப்படியான நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் சங்கரை மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக மாற்றுமா என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் நேற்று ரிலீசான நிலையில் படத்திற்கு இரு வேறு கருத்துக்கள் பெரும்பான்மையான ரசிகர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை சங்கர் தன்னுடைய படத்தையே மீண்டும் எடுத்து வைத்துள்ளார் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். படத்தின் கதையை பொருத்தவரை ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் கதைக்களமாக அமைந்துள்ளது.

முதல் பாதையை ரசிகர்களுக்கு போர் அடிக்கும் விதமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சற்று சுவாரஸ்யமாக தான் உள்ளது. படத்தில் ராம்சரண் நடித்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் 52 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 75 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

4 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

7 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

11 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

13 minutes ago

“விஜய் யாருடைய ஓட்டைப் பிரிப்பார்?”… அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த பூங்குன்றன்… 2026-ல் நடக்கப்போகும் அந்த ‘அமைதியான புரட்சி’ இதுதான்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…

15 minutes ago

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

16 minutes ago