“இதோ வந்துட்டா என் அக்கா”… இறந்த அக்காவின் உடலைத் தோண்டி எடுத்து வங்கிக்குச் சுமந்து வந்த தம்பி… அதிரவைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

Spread the love

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில், வங்கி நடைமுறைகளால் மனமுடைந்த ஒரு நபர், உயிரிழந்த தனது சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்குச் சுமந்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தியனாலி கிராமத்தைச் சேர்ந்த ஜீத்து முண்டா (50) என்பவரின் சகோதரி கர்லா முண்டா கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவர் தனது கால்நடைகளை விற்றுச் சேர்த்த சுமார் 19,300 ரூபாய் பணத்தை மாலிபோசி கிளையில் உள்ள ஒடிசா கிராமிய வங்கியில் சேமித்து வைத்திருந்தார். வாரிசுதாரர் இல்லாத நிலையில், அந்தப் பணத்தைப் பெற ஜீத்து முண்டா அணுகியபோது வங்கி ஊழியர்களின் அணுகுமுறை மனிதாபிமானமற்ற நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது.

படிப்பறிவில்லாத பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜீத்து முண்டா, தனது சகோதரியின் இறப்பை வங்கி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் அவர்கள் அதனை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. “பணத்தை எடுக்க வேண்டுமென்றால் கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வாருங்கள்” என்று ஊழியர்கள் பிடிவாதமாகக் கூறியதால், வேறு வழியின்றி விரக்தியடைந்த ஜீத்து, புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, எலும்புக்கூட்டை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி 3 கிலோமீட்டர் தூரம் சுமந்து வங்கிக்கு வந்துள்ளார். இந்தச் செயல் வங்கி ஊழியர்களையும் பொதுமக்களையும் உறைய வைத்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ஜீத்துவைச் சமாதானப்படுத்தினர். வங்கி ஆவணங்களில் உரிய வாரிசுதாரர் விவரம் இல்லாததால் ஏற்பட்ட குழப்பத்தை ஊழியர்கள் முறையாகக் கையாண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஒடிசா மாநில அமைச்சர் சுரேஷ் பூஜாரி இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏழை எளிய மக்களிடம் வங்கி ஊழியர்கள் கனிவுடன் நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஜீத்து முண்டாவிற்கு உடனடியாக ரெட் கிராஸ் நிதியிலிருந்து 20,000 ரூபாய் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வருவாய்த் துறை மூலமாக விரைவாகப் பெற்றுத் தந்து, வங்கியில் உள்ள சேமிப்புப் பணத்தை அவரிடம் ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மனிதாபிமானத்தை விடவும் விதிமுறைகளே பெரிது என நினைக்கும் அதிகார வர்க்கத்தின் போக்கிற்கு இச்சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ கடவுளே… ஆன்லைன் வேலை தாங்க முடியல… கடிதம் எழுதி வைத்துவிட்டு… தலைமை ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் வல்சாடு மாவட்டத்தில் உள்ள நிலோஷி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் ஜாதவ், தனது வீட்டில் தற்கொலை…

5 minutes ago

“வாரண்டி என்பது சும்மா பெயருக்கா…?” வாங்கிய 2 மாதத்தில் பழுதான சோனி ஹோம் தியேட்டர்… கட்டணம் கேட்டதால் ஷாக்கான வாடிக்கையாளர்… வைரலாகும் பதிவு…!!

சுவேதா சர்மா என்ற பெண்மணி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோனி நிறுவனத்தின் ஹோம் தியேட்டரை ஆசையுடன் வாங்கியுள்ளார். ஆனால்,…

6 minutes ago

அதிர்ச்சி..! நொடிப்பொழுதில் பறிபோன சங்கிலி… மக்கள் நடமாட்டமுள்ள ரோட்டில் மின்னல் வேகக் கொள்ளை… துணிச்சலாகத் திருடிய பைக் ஆசாமிகள்… பகீர் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில்…

7 minutes ago

“வேலையை விட்டு நிறுத்தப்பட்ட பெண்…” சலூன் கடைக்குள் புகுந்து ஓனரை அடி வெளுத்த கணவர்… நண்பர்களுடன் சேர்ந்து வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பெங்களூரு அவலஹள்ளியில் இயங்கி வரும் யூனிசெக்ஸ் சலூன் ஒன்றின் உரிமையாளர் மீது, நபர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரத்…

16 minutes ago

ஏய்… வழி விடுடா… நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்… வாள்களுடன் 4 பேர் ஒரே பைக்கில் வெறியாட்டம்… அலறிய மக்கள்… நடுங்கவைக்கும் CCTV வீடியோ… வாரங்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

வாரங்கல் நகரில் இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில், மதுபோதையில் இருந்த நபர்கள் சிலர் எல்லைமீறிய ஆட்டத்திலும் அராஜகத்திலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு…

28 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை?… பெட்ரோல் பங்க்கில் திடீரென நகர்ந்த கார்… அலறித் துடித்த ஊழியர்கள்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி முடிந்தவுடன், பணத்தைச் செலுத்தியதும் அவசரத்தில் வாகனத்தை உடனே இயக்கும் வழக்கம் பல டிரைவர்களிடம் உள்ளது.…

37 minutes ago