“யூடியூப்பில் சிரித்த முகம்.. வீட்டிற்குள் ரத்தக் கறை”…. பிரபல யூடியூபருக்கு நேர்ந்த பயங்கரம்… துடிதுடிக்க கணவன் செய்த கொடூரம்…!

Spread the love

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் வசித்து வந்த தம்பதி சுப்பிரமணி (51) மற்றும் நாகலட்சுமி (41). இவர்களது மூத்த மகன் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வரும் நிலையில், இளைய மகன் சென்னையில் மருத்துவம் பயின்று வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த இளைய மகன் சைலேஷ், வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு ஹால் முழுவதும் ரத்தக் கறைகள் படிந்திருக்க, நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகவும், மற்றொரு அறையில் தந்தை சுப்பிரமணி தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையிலும் இருப்பதைக் கண்டு அலறியுள்ளார்.

கொல்லப்பட்ட நாகலட்சுமி, அப்பகுதியில் பட்டுச் சேலை விற்பனை கடை நடத்தி வந்ததோடு, சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். தனது யூடியூப் சேனல் மூலம் புடவைகளைத் தரம் பிரித்துக் காட்டி விளம்பரம் செய்து வந்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணையில், இந்த தம்பதியினரிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கடும் மோதல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நாகலட்சுமிக்கு இருந்த தொழில் ரீதியான கடன் சுமைகளும், அவர் யூடியூப் வீடியோக்களில் தோன்றுவது தொடர்பாக கணவர் சுப்பிரமணிக்கு இருந்த சந்தேகமும் இந்தத் தகராறுகளுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மனக்கசப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்றிருந்த சுப்பிரமணி, கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் ஏற்பட்ட தகராறில் நாகலட்சுமியின் தலை, கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், குற்ற உணர்ச்சியாலோ அல்லது சட்டத்திற்குப் பயந்தோ சுப்பிரமணியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் துயரம் நடந்ததா அல்லது இந்த மரணங்களுக்குப் பின்னால் வேறு ஏதேனும் மர்மம் ஒளிந்துள்ளதா என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பிரபலமான ஒரு யூடியூபர் மற்றும் தொழிலதிபர் தனது சொந்த வீட்டிலேயே கணவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு பிரபல நடிகை சசிலையா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

5 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

5 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

5 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

5 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

5 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

5 மணத்தியாலங்கள் ago