BREAKING: விஜய் பாடல்களை பயன்படுத்த தடை… வெளியான பரபரப்பு உத்தரவு..!!

By Soundarya on பங்குனி 18, 2026

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் நடிகர் விஜய்யின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பலர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெயர் மற்றும் சின்னத்தைக் கூறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இத்தகைய செயல்கள் அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் (HM) தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கலை நிகழ்ச்சிகளின் போது விஜய் பாடல்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் அரசியல் தாக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், தேர்தல் நடத்தை விதிகளைக் கருத்தில் கொண்டும் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.