விஜய் ரசிகர்களுக்குப் பேரிடி! ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தடை விதிப்பு..? தேர்தல் ஆணையம் எடுக்கும் அதிரடி முடிவு..!!

By Soundarya on பங்குனி 18, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நீண்டகாலமாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இப்படத்தின் தணிக்கை மறு ஆய்வுக் குழுவின் (Revising Committee) திரையிடல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், படத்திற்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இப்படம், ராணுவக் காட்சிகள் மற்றும் சில அரசியல் வசனங்கள் தொடர்பான புகார்களால் தணிக்கை வாரியத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், படத்தின் வெளியீட்டில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இப்படம் அரசியல் பின்னணியைக் கொண்டிருப்பதாலும், தேர்தலுக்கு முன்பாக வெளியாவது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், தணிக்கை வாரியம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission) கருத்து அல்லது ஒப்புதலைக் கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே ‘ஜனநாயகன்’ திரைக்கு வர வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.