இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்… சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – ஆஸ்திரேலியாவில் வெளியான அதிரடி அறிவிப்பு!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இன்றைய நிலையில் இளம் வயதினர் குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டோர் மிக அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் நாள் முழுவதும் மணிக்கணக்கில் மூழ்கிப் போகின்றனர். இதையடுத்து ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு அதிரடி அறிவிப்பை செய்து இன்று முதல் அந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்டாக் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 10 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 10 செயலிகளையும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பயன்படுத்த தடை இன்று முதல் இது நடைமுறை என்ற தகவல் வெளியாகி உள்ளது.