இல்லத்தரசிகளுக்கு ஷாக்…. Everest, LG பெருங்காயத்தில் பேரதிர்ச்சி…. சற்றுமுன் FSSAI அதிரடித் தடை….!

By Nanthini on ஆவணி 30, 2026

Spread the love

எவரெஸ்ட் மற்றும் LG ஆகிய பிரபல நிறுவனங்களின் பெருங்காயத்தூள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஆய்வில் அம்பலமாகியுள்ளது. நுகர்வோர் அளித்த புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதன்மை ஆய்வகப் பரிசோதனையில், இவ்விரு பிராண்டுகளின் கலப்பு பெருங்காயப் பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, எவரெஸ்ட் பெருங்காயத்தூளில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவுகள் மிகக் குறைவாகவும், LG பெருங்காயத்தூளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஸ்டார்ச் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இரு நிறுவனங்களின் பெருங்காய மாதிரிகளிலும் ஆல்கஹாலில் கரையக்கூடிய சாற்றின் அளவு (Alcohol-soluble extract) 0 முதல் 3 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால், உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி இந்த அளவு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து, சந்தையில் விற்பனைக்கு இருக்கும் அனைத்து தரமற்ற தயாரிப்புகளையும் உற்பத்தியாளர்களே தாமாக முன்வந்து திரும்பப் பெற (voluntary recall) FSSAI உத்தரவிட்டுள்ளது. மேலும், சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்யாவிட்டால், இரு நிறுவனங்களின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.